ஷாஜகான் பட நடிகையை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க
விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் படத்தில் நடித்த நடிகை ரிச்சாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
‘ஷாஜகான்’ திரைப்படம்
2001 ஆம் ரவி என்பவர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘ஷாஜகான்’.
நண்பனுக்காக தனது காதலை வெளியே சொல்லாமல் இருக்கும் அழகிய ஒரு தலை காதல் கதை. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
படத்தில் கவிஞர் வைரமுத்து அற்புதமான வரிகளில் வெளிவந்த பாடல்களுக்கு இன்றளலும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ரிச்சா. மேலும் காதல் கிருக்கன், சம்திங் சம்திங் படங்களிலும் நடித்து குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இவர் தமிழ் சினிமாவில் மட்டுமன்றி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.
பல விளம்பர படங்களிலும் நடித்திருக்கின்றார்.பின்னர் ஹிமான்சு பஜாஜ் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரிச்சாவுக்கு தற்போது ஒரு மகன் இருக்கின்றார்.
இந்நிலையில் இவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
இந்த வயதிலும் இளமை மாறாமல் ஹாட் உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |