ஆடம்பர பங்களாவை விட்டு வாடகை வீட்டிற்கு செல்லும் ஷாருக்கான்! அதிருப்தியில் ரசிகர்கள்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சொந்த பங்களாவை விட்டுவிட்டு வாடகை வீட்டிற்கு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஷாருக்கான்
பாலிவுட் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கான் தனது மன்னத் பங்களாவை விட்டு தற்போது வாடகை வீட்டிற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மன்னத் பங்களாவை வாங்குவதற்கு மிகப்பெரிய கதையும் உள்ளதாம். படங்களில் நடிக்கும் ஷாருக்கான் டெல்லியிலிருந்து மும்பைக்கு நடிக்க வந்த போது வீடு வாங்க வேண்டும் என்பது பெரிய கனவாக இருந்துள்ளது.
ஏனெனில் இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்த இவர், தங்குவதற்கு வீடு இல்லாமல் இருந்துள்ளார். அதன் பின்பு தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக ஒரு வீடு வேண்டும் என்ற ஆசை ஏற்பட்ட நிலையில், மும்பையில் பங்களா ஒன்றினை வாங்கி அதற்கு மன்னத் என்று பெயர் வைத்தார்.
வில்லா வியன்னாவாக இருந்த பங்களா தற்போது மன்னத் என்கிற பெயரில் 6 மாடி கொண்ட பிரமாண்டமாக இருக்கிறது.
வாடகை வீட்டிற்கு சென்ற ஷாருக்கான்
இந்நிலையில் மேலும் 2 மாடிகளை சேர்க்கவும், புதுப்பிக்கவும் முடிவு செய்துள்ளதுடன், குறித்த பங்களாவில் சில பராமத்து பணி செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து மன்னத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பூஜா காசா அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்திருக்கிறார்.
வரும் ஏப்ரல் மாதம் துவங்கி 3 ஆண்டுகளுக்கு ஷாருக்கானின் குடும்பம் அந்த வாடகை வீட்டில் தான் இருக்குமாம்.
27 ஆயிரம் சதுர அடியில் இருக்கும் அந்த பங்களாவை கடந்த 2001ம் ஆண்டில் ரூ. 13.01 கோடிக்கு வாங்கியுள்ள நிலையில், தற்போது இதன் மதிப்பு 200 கோடி ஆகுமாம்.
தற்போது அவர் வாடகைக்கு செல்லும் வீடு மன்னத்தின் பாதி அளவு கூட இல்லாத நிலையில், அங்கு குடியேற உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஷாருக்கான் வாடகைக்கு எடுத்திருக்கும் வீட்டின் உரிமையாளர் வேறு யாரும் அல்ல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் மாமனார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |