மனவளர்ச்சி குன்றிய ரசிகருக்கு முத்தமிட்ட ஷாருக்கான்- வைரலாகும் வீடியோ
மைதானத்தில் மனவளர்ச்சி குன்றிய கேகேஆர் ரசிகருக்கு முத்தமிட்ட ஷாருக்கானின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெங்களூரு அணியை வீழ்த்திய கொல்கத்தா அணி
நேற்று 16வது ஐபிஎல் தொடருக்கான 9வது லீக் போட்டிஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், பெங்களூரு அணியும், கொல்கத்தா அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இப்போட்டியின் முடிவில் கொல்கத்தா அணி பெங்களூரு அணியை 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.

ரசிகருக்கு முத்தமிட்ட ஷாருக்கான்
நேற்று நடைபெற்ற இப்போட்டியை நேரில் காண கேகேஆர் அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கான் ஈடன் கார்டன் மைதானத்திற்கு வருகை தந்தார்.
அவருடன் அவரது மகன் சுஹானா கான் வந்தார். ஷாருக்கானைப் பார்த்ததும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானமே கோலாகல கொண்டாட்டத்துடன் காணப்பட்டது.
மைதானத்தில் மனவளர்ச்சி குன்றிய கேகேஆர் ரசிகரை ஈடன் கார்டன் மைதானத்தில் ஷாருக்கான் சந்தித்தார்.
அப்போது, அவருடன் ஷாருக்கான் உரையாடல் நிகழ்த்தினார். பிறகு, அந்த மனவளர்ச்சி குன்றிய ரசிகருக்கு ஷாருக்கான் முத்தமிட்டு அன்பு மழையை பொழிந்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஷாருக்கான் இந்த செயலுக்கு அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.
Shahrukh Khan meeting a hardcore KKR fan in Eden.
— Johns. (@CricCrazyJohns) April 7, 2023
A beautiful gesture from great man.pic.twitter.com/zmabJ53oe7