செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவின் திருமண நாள் வாழ்த்து... வைரலாகும் கணவனின் பதில்
செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா தனது கணவனுக்கு திருமண நாள் வாழ்த்து கூறி தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சீரியல் நடிகை ஷபானா
செம்பருத்தி சீரியல் மூலமாக சின்னத்திரையில் முன்னணி நடிகையாக மாறியவர் ஷபானா. இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன் பிறகு பிரபல தொலைக்பாட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்தார். ஆனால் அதில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
அதனை தொடர்ந்து ஷபானா பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அவர்கள் பல வருடமாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில் ஒருகட்டத்தில் திடீரென திருமணம் செய்துகொண்டனர்.
அவர்கள் இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் ஷபானா வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததாக தகவல்கள் வெளியானது.
ஆனால் பல எதிர்ப்புகளையும் தாண்டி வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் தங்களின் திருமண வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
திருமணம் முடிந்த நாளில் இருந்து இருவரும் ஜோடியாக இருக்கின்ற புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகை ஷபானா அவர்கள் தனது திருமணத்திற்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயரை மாற்றியுள்ளார்.
இவர் 2021 நவம்பர் 11 ம் திகதி ஆரியனை காதலித்து திருமணம் செய்தார். இன்றுடன் மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் தனது கணவனுக்கு திருமண நாள் வாழ்த்து கூறி தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |