செம்பருத்தி சீரியல் பார்வதி திடீர் திருமணம்: திருமணக் கோலத்தில் கண்கலங்கியபடி வெளியிட்ட காணொளி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஷபானா இன்று தனது காதலரை திருமணம் செய்துள்ளார்.
பிரபல ரிவியில் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யனை காதலிப்பதாகவும், அவருடன் நிச்சயம் செய்யப்பட்டதையும் நடிகை ஷபானா வெளியிட்டார்.
பின்பு சமூகவலைத்தளங்களில் காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வந்த பார்வதி, தற்போது கண்கலங்கிய நிலையில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில், மக்களின் ஆதரவினால் தான் சென்னையில் இருக்கிறேன். அவ்வாறு இருந்ததால் தான் தற்போது புதிய வாழ்க்கை ஒன்று கிடைத்திருக்கின்றது. இன்று திருமணம் செய்து கொள்ளப்போவதாக கண்கலங்கி எமேஷனலாக காணொயில் பேசியுளளார்.
திருமண கோலத்தில் அவர் வெளியிட்ட எமேஷ்னல் காட்சியினை அவதானித்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.