ராஜகோபாலனை தொடர்ந்து சிக்கிய மற்றொரு பள்ளி ஆசிரியர் ஆனந்த்
ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளிடம் வன்கொடுமை செயலில் ஈடுபட்ட ராஜ கோபாலன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றொரு பள்ளி ஆசிரியர் ஒருவர் சிக்கியுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் மகரிஷி வித்யா மண்டீர் தனியார் பள்ளியில் ஆசிரியர் ஆனந்திற்கு எதிராக முன்னாள் மாணவர்கள் வன்கொடுமை புகார்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
பின்பு முன்னாள் மாணவர்கள் சேர்ந்து, குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம், மகளிர் ஆணையம், உயர்கல்வி துறை செயலாளர், பள்ளி நிர்வாகம் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் ஆசிரியர் ஆனந்த், மாணவர்களுக்கு வன்கொடுமை தொந்தரவு கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் ஆசிரியர் ஆனந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புகார் தொடர்பாக நேர்மையாகவும், வெளிப்படையாகவும் விசாரணை நடத்தும் வகையில் குழு அமைக்கப்படுவதாகவும் பள்ளி நிர்வாகம் பதில் அளித்துள்ளது.