செவ்வாய் பெயர்ச்சியின் அருளால்.. அடுத்த ஓரிரு நாட்களில் யோகம் தேடி வரப்போகும் ராசியினர்கள்
ஜோதிடத்தின் படி கிரகங்களின் ராசி மாற்றம் மற்றும் செவ்வாயின் அருட்பார்வையும் சேர்ந்து, ஜூலை 4ம் தேதி வரை குறிப்பிட்ட சில ராசிகளுக்கு தொழில் மற்றும் பணியிடத்தில் சாதகமான சூழலை ஏற்படுத்தும். அப்படி எந்தெந்த ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுப்பார் என இங்கு பார்போம்.
மேஷம்
மேஷ ராசிக்கு செவ்வாயின் அருளால் தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் உண்டாகும். சிலருக்கு புதிய வேலை அல்லது பதவி உயர்வு கிடைக்கும்.
புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் சக்தி வாய்ந்தயோகம் உண்டாகும். புதிய வேலையை தொடங்க இதுவே சிறந்த நேரம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்,. திருமணம் கைகூடி வரும். வீண் செலவை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்
மிதுன ராசியினர்களுக்கு செவ்வாயின் அருளால் பல நல்ல பலன்களை கிடைக்கும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். லாபம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கலாம்.
தனுசு
தனுசு ராசியினர்களுக்கு செவ்வாயின் அருள் மிகப்பெரிய நன்மையை தேடித்தரும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
அரசு வேலைக்காக நீண்ட வருடங்களாக காத்திருந்தவர்களுக்கு இந்த முறை கிடைக்கும். தொழிலில் வருமானம் அதிகமாகி வாழ்க்கையில் நிம்மதி உண்டாகும்.
நீண்ட நாளுக்காக காத்திருந்த விஷயம் இனி நிறைவேறும். இனி தொட்டது வெற்றியில் முடியுமாம்...