இனிமேல் அழமாட்டேன்: மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி உருக்கமான பதிவு
தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் மற்றும் டாக்டரான சேதுராமன்.
கர்ப்பிணியாக இருந்த மனைவி
இவர், கடந்த 2020ம் ஆண்டு திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இவரின் மறைவு திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
சேதுராமன் மரணமடையும் போது அவரது மனைவி உமா 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். அதன் பின்னர் ஆண் குழந்தையை பெற்ற அவர் தனது கணவரே மீண்டும் திரும்பி வந்து விட்டதாக நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருந்தார்.
இந்த பாதிப்பு உள்ளவர்கள் கருவாட்டை சாப்பிடவே கூடாதாம்?
இரண்டாம் ஆண்டு நினைவு நாள்
இந்த நிலையில், கடந்த நாட்களுக்கு முன் சேதுராமனின் 2வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது உமா தனது சமூக வலைத்தளத்தில், “நான் இனிமேல் அழ மாட்டேன் எனவும், நான் அழுதால் இந்த உலகைவிட்டு சென்ற எனது கணவரின் ஆத்மாவுக்கு மிகுந்த வலியை கொடுக்கும் என்பதை நான் புரிந்து கொண்டேன்” என்றும் உணர்ச்சி பூர்வமாக தெரிவித்துள்ளார்.
உருக்கமான பதிவு
மேலும், நாம் ஒரு ஆத்மாவை தான் இழந்துள்ளோம். ஆனால் அவர் சேர்த்து வைத்த அத்தனை ஆத்மாக்களையும் பிரிந்துவிட்டதால் அவருக்கு தான் வலி அதிகம் என பதிவிட்டுள்ளார்.
இப்பதிவை கண்ட நெட்டிசன்கள் தற்போது வரை பலரும் ஆறுதலாகவும், உருக்கமாகவும் இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.