எள் டீ குடித்திருக்கிறீர்களா? தினமும் குடித்து வந்தால் உங்கள் உடலுக்கு மாத்திரைகள் தேவையே இல்லை
பொதுவாகவே நாம் வித விதமான டீ குடித்திருப்போம். ஆனால் அவை சிலவற்றை ஆசைக்காக குடித்திருப்போம் அல்லது ஆரோக்கியத்திற்காக குடித்திருப்போம்.
அப்படித்தான் அதிக ஆரோக்கியம் நிறைந்த எள்ளில் கூட டீ செய்து குடிக்கலாம். அந்த டீயைக் குடித்தால் உங்கள் உடலுக்கு என்னென்ன பலன்கள் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
எள் டீ தயாரிக்கும் முறை
2 தேக்கரண்டி எள் விதைகளை எடுத்து நன்றாக நசுக்கி ஒரு கப் தண்ணீரில் 10 இலிருந்து 20 நிமிடத்திற்கு கொதிக்க வைத்து எடுத்து ஆற வைத்து குடிக்க வேண்டும்.
எள் டீயின் நன்மைகள்
இந்த எள் டீயை ஒவ்வொரு நாளும் 2 அல்லது 3 கப் குடித்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும், தாய்பால் உற்பத்தி அதிகரிக்கும், கண்பார்வை மேம்படும், மாதவிடாய் கோளறுகளை சமாளிக்கும்.
இந்த எள் விதையில் வைட்டமின் ஈ போன்ற அத்தியாவசதி ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது அதனால் உடலுக்கு தேவையான சத்துக்களும் ஆரோக்கியமும் கிடைக்கும்.
மேலும், இதில் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும் இருப்பதால் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |