எள் சாப்பிடுவதால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும்? யாரெல்லாம் சாப்பிடவே கூடாது தெரியுமா? ஜாக்கிரதை!
எந்த உணவாக இருந்தாலும் அதன் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், விரும்பத்தகாத பக்கவிளைவுகளை நாம் எதிர்கொள்ள நேரிடும். எள் விதைகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. நம் உடலின் ஆரோக்கியத்திற்கு எள் விதைகளின் பங்கு அளப்பரியது ஆகும். எள் உணவால், நமது உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. நம் உணவில், இதன் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
இனி அது குறித்து விரிவாக பார்க்கலாம். உணவில் எள்ளின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், ரத்தத்தில் அதிக அளவிலான சர்க்கரை கட்டுப்படுத்தப்பட்டு, சர்க்கரையே இல்லாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. இரத்தத்தில், உப்பின் அளவு அதிகரிக்கும்போது, அது செல்களில், நீர் இழப்பை அதிகரிக்க செய்து விடுவதால், ரத்த அழுத்தம் அதிகரிக்க ஏதுவாக அமைகிறது. நம் உணவில், அதிகளவு எள் இருக்கும்போது, அது ரத்த அழுத்தத்தை அதிகளவில் குறைத்து விடுகிறது.
குடல் அழற்சி என்பது ஒரு வகையான நோய் ஆகும். இதில் குடலின் பின்பகுதி பெருக்கம் அடைந்து கடுமையான வலி ஏற்பட காரணமாக அமைகிறது. நமது உணவில் உள்ள செரிமானம் ஆகாத உணவுகளினாலேயே இந்த நிலை ஏற்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள எள் விதைகளை, நம் உணவில் அதிகமாக சேர்க்கும் போது, அது குடல் பகுதியில் படிந்து அதன் அளவை விரிவடைய செய்து வீக்கங்களை ஏற்படுத்தி, அதிக வலி ஏற்பட காரணமாக அமைகிறது.
எள் விதைகளை நாம் அதிகமாக உணவில் சேர்க்கும்போது, அது நம் உடலில் அனாபிலாக்சிஸ் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தி விடுகிறது. குமட்டல், சுவாசித்தலில் பிரச்சினை, அதிர்ச்சி உள்ளிட்டவைகள் இதன் அறிகுறிகள் ஆகும். எள் காரணமாக ஏற்படும் ஒவ்வாமை பாதிப்பு கொண்டவர்கள்,எள் கலந்த உணவை எடுத்துக்கொள்வதற்கு முன், மருத்துவரிடம் தகுந்த ஆலோசனையை பெற்று செயல்படுவது உத்தமம்.
கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், எள் கலந்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில், எள் விதைகளில் உள்ள ஆக்சலேட்டுகள், கீல்வாதத்தின் அறிகுறிகளை மிகவும் மோசமானதாக ஆக்கி விடுவதாக, மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர். எவ்வளவு உட்கொள்ள வேண்டும்? நமது உடல் திறன், செயல்பாடுகள், உணவு முறை உள்ளிட்ட காரணிகளே, நமது உணவில் எவ்வளவு அளவிற்கு எள் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன.
வாரத்திற்கு, 40 முதல் 50 கிராம் அளவிலான எள் விதைகள் நமது உணவில் இருத்தல் நலம். இது வயது, உடல் அமைப்பு, செயல்திறன் அளவு உள்ளிட்டவைகளை பொறுத்து வேறுபடும்.