படப்பிடிப்பில் திடீர் மாரடைப்பு! பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி
பிரபல இயக்குனர் நாகாவிற்கு படப்பிடிப்பில் மாரடைப்பு ஏற்பட்டதால் முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் நாகா
சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் திகில் நிறைந்த அற்புத படைப்புகளை இயக்கியவர் தான் இயக்குனர் நாகா. இவர் பல திகில் சீரியல் மற்றும் படத்தினை இயக்கியுள்ளார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பான மர்ம தேசம், ரகசியம், விடாது கருப்பு, எதுவும் நடக்கலாம், சிதம்பர ரகசியம், யாமிருக்க பயமேன், போன்ற சீரியல்களையும், ஆனந்தபுரத்து வீடு என்ற திகில் படத்தையும் இயக்கினார்.
இந்நிலையில் வெப் சீரிஸிங் படப்பிடிப்பில் இருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கீழே சரிந்துள்ளார். இவரை மீட்டு முதலுதவி அளித்த படக்குழுவினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குனருக்காக திரையுலகினர் பெரும் கவலை இருப்பதுடன், பிரார்த்தனையும் செய்து வருகின்றனர்.