7 வயது குறைந்த நடிகரை திருமணம் செய்த சீரியல் நடிகை! ரசிகர்கள் வாழ்த்து மழை
அயலி சீரியல் நடிகர் ஆனந்த் செல்வன் - நடிகை சியாமந்தா கிரண் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ள காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
ஆனந்த் செல்வன் - சியாமந்தா கிரண் திருமணம்
சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான அயலி தொடரில் நடித்த நடிகர் ஆனந்த் செல்வன் மற்றும் சீரியல் நடிகை சியாமந்தா கிரண் ஆகியோரின் திருமணம் தற்போது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் சிறப்பாக நடைந்து முடிந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், தற்போது தங்களது காதலை திருமண பந்தத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ஆனந்த் செல்வன் மற்றும் சியாமந்தா கிரண் இருவரும் ஆயுத எழுத்து சீரியலில் இணைந்து நடித்தபோது நெருக்கமாக பழகியதாகவும், அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், சியாமந்தா கிரணை விட ஆனந்த் செல்வன் சுமார் 7 வயது இளையவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் குறித்த திருமணம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
திருமணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சின்னத்திரை உலகின் பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

குறிப்பாக நடிகை பவித்ரா ஜனனி உள்ளிட்ட பல பிரபலங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும், வரவேற்பு மேடையில் மணமக்களுடன் இணைந்து நடிகை பவித்ரா ஜனனி நடனமாடிய காணொளி இணையத்தில் வைராலாகியுள்ள நிலையில், ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |