திருமணமாகாமல் கையில் குழந்தையுடன் பிரபல சீரியல் நடிகை! வெளியிட்ட கியூட் காட்சி
சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் கையில் குழந்தை ஒன்றினை கொஞ்சி வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது்
நடிகை ஸ்ருதி ராஜ்
தென்றல் சீரியலில் மிகவும் சாதுவாக கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் தான் நடிகை ஸ்ருதி. சீரியலில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் சில காலம் நடிக்காமல் இருந்தார்.
பின்பு தற்போது தாலாட்டு சீரியல் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்துள்ள இவர், சீரியலில் மகனாக நடிக்கும் சிறுவனுடன் பல காணொளிகளை வெளியிட்டு வந்தார்.
குறித்த சீரியலில் இரண்டாவது குழந்தை பெற்றெடுக்க கர்ப்பமாக இருப்பது போன்று நடித்து வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே இவர் 40 வயதைக் கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் பல முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகின்றார்.
இந்நிலையில் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அழகாக கொஞ்சும் காட்சியை தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார்.