கடந்த காலம் பற்றி கவலை இல்லை.. 2 ஆவது திருமணம் செய்து கொண்ட ஸ்ருத்திகா- மாப்பிள்ளை இவர்தானா?
நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ருத்திகா, சக நடிகர் ஆரியனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ருத்திகா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சீரியல் தான் நாதஸ்வரம்.
இந்த சீரியலில் நடிகை ஸ்ருத்திகா கதாநாயகியாகவும் திருமுருகன் கதாநாயகனாகவும் நடித்திருந்தனர்.
திருமுருகன் இயக்கி நடித்திருந்த இந்த சீரியல் சுமாராக 5 வருடங்கள் வரை ஒளிபரப்பானது. 5 தங்கைகளுக்கு ஒரே அண்ணனாக இருந்து காப்பாற்றுவது போன்று இந்த கதைக்களம் அமைந்திருந்தது.
இந்த சீரியலில் நடிப்பதற்குமுன் வெண்ணிலா கபடி குழு, மகேஷ் சரண்யா மற்றும் பலர், வேங்கை உள்ளிட்ட சீரியல்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருப்பார்.
இரண்டாவது திருமணம்
இதனிடையே கடந்த 2020-ஆம் ஆண்டு, சனீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகின.
இதனை தொடர்ந்து தற்போது சீரியல் நடிகர் ஆரியன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இது குறித்து ஸ்ரித்திகா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ எங்களின் கடந்த கால வாழ்க்கை குறித்து நாங்கள் பேச விரும்பவில்லை. மாறாக நாங்கள் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்து விட்டோம். உங்களின் ஆசீர்வாதத்தால் தான் நாங்கள் திருமண வாழ்க்கைக்குள் நுழைகிறோம். எங்களின் திருமணம் புகைப்படங்கள், வீடியோக்கள் என்பவற்றை கூடிய விரைவில் பகிர்வோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |