மாமியாரிடம் பொங்கிய கோபி- மிரண்டு நிற்கும் ராதிகா - இனி நடக்கப் போவது என்ன?
ஈஸ்வரிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் கோபி மாமியாரை கடுமையாக கண்டித்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், தற்போது பாக்கியா - கோபியின் கதை முடிந்து ராதிகா - கோபியின் கதை ஆரம்பமாகியுள்ளது.
தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை வைத்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் கோபி இறங்கியுள்ளார்.
இதற்கு செழியன் மற்றும் எழில் இருவருமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாமியாரிடம் பொங்கிய கோபி
இந்த நிலையில் ராதிகா, ஈஸ்வரி இருவரையுமே கோபி ராதிகா வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
ராதிகா - அம்மாவிற்கு ஈஸ்வரி வீட்டிற்குள் வருவது பிடிக்கவில்லை. இதனால் ஈஸ்வரிக்கு பிடிக்காத வேலைகளை தொடர்ந்து பார்த்து வருகிறார்.
கமலா கொடுத்த தொடர் தொந்தரவால் ஈஸ்வரி உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
சிகிச்சை முடிந்து ஈஸ்வரி வீடு திரும்பியவுடன் மாமியாரை அழைத்த கோபி, “ ஏ அம்மா இங்க தான் இருப்பாங்க.. அவுங்களுக்கு எக்காரணம் கொண்டும் பிரச்சினை கொடுக்கக் கூடாது. ” என கடுமையாக கண்டித்துள்ளார்.
கோபி இப்படி தன்னுடைய அம்மாவிடம் பேசுவதை பார்த்த ராதிகா மிரண்டு போய் நிற்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |