சினிமா நடிகைகளுக்கே ட்ஃப் கொடுக்கும் செம்பருத்தி சீரியல் ஷபானா... குவியும் லைக்குகள்

Vinoja
Report this article
செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா கொள்ளை அழகில் கியூட் போஸ் கொடுத்து தற்போது தனது சமூகவளைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை ஷபானா
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த தொடர்களில் ஒன்று செம்பருத்தி தொடர்.
செம்பருத்தி சீரியல் மூலம் பார்வதியாக சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காதாத இடம் பிடித்தவர் தான் நடிகை ஷபானா.
செம்பருத்தி சீரியல் மக்களின் அமோக வரவேற்பை பெற்றதுடன் ஷபானாவின் அடையாளமாகவே அது மாறிவிட்டது என்றால் மிககையாகாது. இன்றும் இவரின் பெயரை பார்வதி என நினைப்பவர்கள் ஏராளம்.
அந்தளவுக்கு அந்த கதாப்பாத்திரம் பெரும்பாலான ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டது.
அதனை தொடர்ந்து பிரபல தொலைக்பாட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்தார்.
ஆனால் அதில் இருந்து இடையிலேயே வெளியேறிவிட்டார். ஷபானா பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.கடும் எதிர்ப்புகளையும் மீறி இருவரும் மகிழ்சியான திருமண வாழ்க்கையை கழித்துவருகின்றனர்.
சமூகவளைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டிவரும் ஷபானா தற்போது தனது சமூகவளைத்தள பக்கத்தில் கொள்ளை அழகில் கியூட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளிவருவதுடன் நம்ம செம்பருமத்தி ஷபானாவா இது? ஆளே மாறிட்டாங்களே என ரசிகர்கள் கமெண்டுகளையும் பதிவி்ட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |