முட்டாள் தனமான பேச்சு.. கோபிநாத் சரமாரியாக தாக்கிய சீரியல் நடிகை- நடந்தது என்ன?
நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த வாரம் பேசப்பட்ட தெரு நாய்கள் வளர்ப்பு விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பில் சீரியல் நடிகை சந்தியா பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த வாரம் பேசப்பட்ட விடயம் இணையவாசிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்தியாவில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் தெருவில் கிடக்கும் நாய்கள் காப்பகங்களில் பராமரிக்கப்பட வேண்டும். அதற்கு முறையான தடுப்பூசி போடவும் உச்சநீதிமன்றம் முடிவு செய்திருந்தது.
இது குறித்து கடந்த வாரம் நீயா நானாவில் விவாதங்கள் கிளம்பின.
கோபிநாத் இனி செய்யாதீங்க
நீயா நானாவில் தெரு நாய்களுக்கு ஆதரவாக பேசிய சின்னத்திரை நடிகை அம்மு மற்றும் நடிகர் படவா கோபி ஆகியோரை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில், நீயா நானாவில் பேசியது தவறு என படவா கோபி மற்றும் நடிகை அம்மு மன்னிப்பு கேட்டு காணொளியில் வெளியிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து சீரியல் நடிகை சந்தியா பேசிய காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த காணொளியில், “ கடந்த வாரத்தில் நீயா நானாவில் ஒளிபரப்பாகிய தெருநாய்கள் பற்றிய விவாதத்தை பலரும் பார்த்திருப்பீங்க. விஜய் டிவி மக்கள் நலன் குறித்து பேசும் நிகழ்ச்சியாக உள்ளது என்றால் சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் யானையால் தாங்கப்பட்டேன். எனக்கு 18 தையல்கள் போடப்பட்டது.
அப்போது நீயா நானாவில் என்னை அழைத்து தான் விவாதம் நடத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் யார் யாரையோ வைத்து நிகழ்ச்சி செய்தார்கள். இவையெல்லாம் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிப்பதற்காகவே செய்து வருகிறார்கள். கோபிநாத், இந்த சமுதாயத்தில் உங்களுக்கென்று தனி மரியாதையும் மதிப்பும் இருக்கிறது. இதனை இல்லாமல் செய்யும் வகையில், நிகழ்ச்சி நடத்த வேண்டாம்.” என பேசியிருந்தார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |