ஆண்களை கெடுப்பது பெண்கள் தான்.. அவ்வளவு மோசமான உடை- சர்ச்சை பேச்சில் சிக்கிய சீரியல் நடிகை
“ பெண்கள் மோசமான உடை அணிவதால் தான் தவறான கருத்துக்கள் எழுகின்றது..” என சீரியல் நடிகை ரிஹானா பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தவறான கண்ணோட்டம்
தமிழ் சினிமாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி பல கருத்துக்கள் பரவலாக உள்ளன.
அதிலும் குறிப்பாக 90களில் கொடிக்கட்டி பறந்த ராதிகா சரத்குமார், நடிகை குஷ்பு, ரோகிணி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இவர்கள் பேசும் போது சுட்டிக்காட்டிய விடயங்களை விட சீரியல் நடிகையொருவர் பேசியது பரவலாக உள்ளது.
இதன்படி, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரிஹானா நடித்து வருகிறார்.
ஆண்களை கெடுப்பது பெண்கள் தான்..
இந்த நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து பேசிய ரிஹானா,“ பெண்களை தவறாக பார்வையில் பார்ப்பது சினிமா மட்டுமல்ல அனைத்து இடங்களிலும் இருக்கிறது.
மாறாக சினிமாவில் இந்த விடயம் தெளிவாக தெரிகிறது அவ்வளவு தான். பெண்கள் சமூகத்தில் சாதிக்க நினைத்தால் இப்படியான கருத்துக்களை அதிகம் பார்க்கலாம். சிலர் வாய்ப்பு தருவதாக அழைத்து தவறான கருத்துக்களை பெண்களிடம் பேசுவார்கள். ஆனால் இது ஆண்கள் மீதுள்ள தவறு மாத்திரமல்ல பெண்கள் மீது தவறு இருக்கிறது.
பெண்கள் அணியும் ஆடைகள் நேர்த்தியாக இருந்தால் இதுபோன்ற கருத்துக்கள் வருவது குறைவாக இருக்கும். நான் பெண்களைத் தான் தவறாக சொல்லுவேன், அவர்கள் தான் ஆண்களை கெடுக்கிறார்கள்...” என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதற்கு சார்பான கருத்துக்கள் இணையத்தில் குவிந்து வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |