ரவீனாவை ஓரங்கட்டிய சின்னத்திரை.. கண்ணீருடன் கொடுத்த கேள்விகளை அடுக்கிய நடிகை
ஆசையாக சின்னத்திரை நடிகை சார்பில் ஓட்டு போட வந்த நடிகை ரவீனாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என கண்ணீருடன் கொடுத்த பேட்டி ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
ரவீனா தாஹா
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ரவீனா தாஹா.
இவர், வெள்ளத்திரையில் பூஜை, ஜில்லா, புலி, ராட்சசன், டிமான் உள்ளிட்ட படங்களில் நடித்திலும் சின்னத்திரையில் தங்கம், பூவே பூச்சூடவா, மௌன ராகம் 2 போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து நடன கலைஞராகவும், போட்டியாளராகவும் இருந்து வருகிறார்.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடன கலைஞர் மணியுடன் இணைத்து பேசப்பட்டார். ஆனாலும் நம்பிக்கையை விடாமல் தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
ரெட் கார்ட் கொடுத்தார்களா?
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த ரவினாவுக்கு அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிந்து பைரவி சீரியலில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அதற்கு அவர் சரி என கூறி ஒப்பந்தமாகியும் இருந்துள்ளார். ஆனால் சில காரணங்களால் சீரியலில் இருந்து வெளியேறிய ரவீனா தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டார் என புகார் கொடுப்பட்டது.
அதற்காக சின்னத்திரை சங்கம் ரவீனாவுக்கு ரெட் கார்டு போட்டு இருக்கிறது. அதனால் வேறு எந்த புதிய சீரியலிலும் நடிக்க முடியாமல் இருக்கிறார். முதலில் ஒரு ஹீரோயின் கதை என சொல்லிவிட்டு அதன்பின் கதையில் மாற்றம் செய்ததால் தான் ரவீனா விலகியதாகவும் தகவல் வெளியாகின.
வாக்களிப்பு தடை
இதனை தொடர்ந்து, சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு தேர்தல் நேற்றைய தினம் நடந்து முடிந்தது. அதில் சின்னத்திரை நடிகர்கள் எல்லோரும் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். ஆனால் ரவீனாவுக்கு வாய்ப்பு கொடுக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இது குறித்து கேட்ட போது அவருக்கு ரெட்கார்டு போடப்பட்டுள்ளது என பதில் கொடுத்துள்ளனர். இதனால் கண்ணீருடன் பேசிய ரவீனா, “ என்னை ஒரு வருடம் நடிக்கக் கூடாது என தொழில் ரீதியாக தான் தடை செய்தார்கள். ஆனால் தற்போது வாக்களிக்கவும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை கடந்த மூன்று வருடங்களாக சங்கத்தில் உறுப்பினாராக உள்ளேன்.
உங்களால் எனக்கும் நஷ்டம் தான்.. ரெட் கார்டு போடப்பட்டதால் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றார்கள். அதன் பின்னர் வாக்களிக்கவும் கூடாது என்கிறார்கள். ஆனால் என்னிடம் பேசும் பொழுது கட்டிப்பிடித்து ஓட்டு கேட்டார்.
மேலும், என்னால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என சொல்கிறார்கள். உங்களால் எனக்கு தான் ஒரு வருடமாக வருமானம் இல்லாமல் இருக்கிறேன்.அதனால் நஷ்டம் சரியாகிவிடுமா? இப்படி நடப்பது உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் சந்தோஷமாக இருங்கள்.” என்னை தடை செய்தது பற்றிய விஷயத்தை பற்றி இப்போது பேசமாட்டேன். அது பெரிய பிரச்சினையாக மாறிவிடும். என்னை வாக்களிக்கவும் வேண்டாம் என்றார்கள் போடவும் இல்லை..” என கண்ணில் கண்ணீருடன் பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |