பிக்பாஸ் பிரபலங்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய சௌந்தர்யா... யாரெல்லாம் இருக்காங்கன்னு தெரியுமா?
பிக்பாஸ் புகழ் சௌந்தர்யா நஞ்சுண்டன் தனது பிறந்த நானை பிக்பாஸ் போட்டியாளர்களுடன் வெகு விமர்சையாக கொண்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சௌந்தர்யா
பிக்பாஸ் புகழ் நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன் மாடலாக தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இறுதியாக ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆன ‘வேற மாறி ஆஃபீஸ்’ வெப் சீரிஸில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 8 நிகழ்சியில் களமிறங்கியுய சௌந்தர்யா நஞ்சுண்டனுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆரதவு காணப்படுட்டது.
இவரால் டைட்டிலை வெல்லமுயாத போதும் 2ஆம் இடத்தை பிடித்து ரன்னர் அப் ஆனார். பிக்பாஸ் நிகழ்சியை தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்கேற்று வருகின்றார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் சக போட்டியாளரின் பிறந்தநாள் வந்தால் சந்தித்துக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்தவகையில், அண்மையில் சௌந்தர்யாவின் பிறந்தநாளை பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் இணைந்து கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |