பாலைவனத்துக்கு சுற்றுலா சென்ற மருமகள் சீரியல் நடிகை... என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க
நடிகை கேப்ரில்லா சார்ல்டன் பாலைவனத்துக்கு சுற்றுலா சென்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை கேப்ரில்லா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களின் மனங்களின் நீங்காத இடம் பிடித்தவர் தான் கேப்ரில்லா சார்ல்டன்.
இவர் கடந்த 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான '3' படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக தமிழ் சினிமாவில் கால்பதித்தார்.
அதனை தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'அப்பா' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பராட்டுகளை பெற்றார்.
சிறுவயதில் இருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றார்.
அதனை தொடர்ந்து 2012ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7சி என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு ரூ. 5 லட்ச பணத்துடன் வெளியேறினார். அதன் பின்னர் மக்கள் மத்தியில் கேப்ரில்லாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மருமகள் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.
நடிப்பில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்திலும் ட்ரெண்டிங் உடைகளில் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பதை வழக்கமான வைத்திருக்கின்றார்.
இந்நிலையில் பாலைவனத்துக்கு சுற்றுலா சென்று இந்த காணொளியை தற்போது வெளியிட்டிருக்கின்றார்.குறித்த காணொளிக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |