இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான சீரியல் நடிகை! மாப்பிள்ளை யார் தெரியுமா?
விஜய் டிவியில் பிபல தொலைக்காட்சி தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடரில் நடித்த நடிகை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடரில் வடிவு என்ற வில்லி ரோலில் நடித்து வந்தவர் தீபா.
அவர் தற்போது மேலும் சில தொடர்களில் நடித்து வருகிறார்.
மேலும், பிரியமான தோழி, அன்பே சிவம் போன்ற தொடர்களிலும் நடித்து வருகின்றார்.
சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் தீபாவுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இந்நிலையில் தீபா விரைவில் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் சாய் கணேஷ் பாபு என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வருகிறாராம்.
அவரை தான் விரைவில் தீபா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போகிறார்.