38 வயதில் காதல் திருமணம் செய்த பிரபல நடிகை...மகிழ்ச்சியின் உச்சத்தில் அழகிய ஜோடி சொன்ன குட் நியூஸ்!
38 வயதில் திருமணம் செய்துகொண்ட நடிகை சந்திரா கர்ப்பமாக இருக்கும் தகவலை அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
மனசெல்லாம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சந்திரா லட்சுமணன். கேரளாவை சேர்ந்த இவர் ஹோட்டல் நிர்வாக பயிற்சி ஈடுபட்டிருந்த போது இயக்குனர் சந்தோஷ் மூலம் மனசெல்லாம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ரறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்ட சந்திர லட்சுமி தனது நீண்ட நாள் காதலரான டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சந்திரா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.
வளைகாப்பு நடைபெற்ற போட்டோக்களை பதிவிட்டு ஜூனியருக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த பதிவு குறித்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.