தமிழ் சீரியலை விட்டு வேறு பக்கம் தாவிய பிரபலம்.. புகைப்படத்தால் சிக்கிய அதிர்ச்சி!
தமிழ் சீரியலை விட்டு வேறு மொழி சீரியல் பக்கம் நடிகை ஆயிஷா தாவி விட்டதாக ரசிகர்கள் விளாசி வருகின்றார்கள்.
ஆயிஷா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “சத்யா” சீரியலில் நடித்து பிரபல்யமாகியவர் தான் ஆயிஷா.
இதனை தொடர்ந்து பல சீரியல்கள் நடித்தாலும் சத்யா சீரியல் போல் வரவில்லை. அதன் பின்னர் ஆயிஷாவிற்கு பெரியளவில் வாய்ப்புகள் இல்லை.
இதனால் பிக்பாஸ் சீசன் 6 முக்கிய போட்டியாளராக உள்நுழைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் காதலர் தினத்தன்று தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார்.
அந்த புகைப்படங்களை தொடர்ந்து நிச்சியதார்த்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.
காதல் தோல்விக்கு பின் ரீ- என்றி
இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா காதல் பிரிவையும் தாண்டி அவரின் புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது தெலுங்கு சீரியல் கமிட்டாகியுள்ளார். இதன்போது எடுக்கபட்ட புகைப்படங்கள் மற்றும் சீரியல் ப்ரோமோ ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சீரியல்களில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் இப்படி வேறு மொழி சீரியல் பக்கம் தாவி விட்டார் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
அத்துடன் மீண்டும் “சத்யா” போல் ஒரு கதை வந்தால் கண்டிப்பாக அதில் நடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |