பிரசவ வலியில் துடித்த பிரபல நடிகை! ரசிகர்களை கண்கலங்க வைத்த காட்சி
பிரபல நடிகை அனு கர்ப்பமாக இருந்த நிலையில் குழந்தையை பெற்றெடுக்க அவர் பட்ட அவஸ்தையை வீடியோக்காட்சியாக இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
சின்னத்திரையில் அனு செய்த சாதனைகள்
கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “பாண்டவர் இல்லம்” என்ற சீரியலில் நடித்து சின்னத்திரைக்கு பிரபல்யமாகியவர் தான் நடிகை அனு.
இவர் ஆரம்பத்தில் “ஆபீஸ்” என்ற தொடரில் நடித்து தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார். இவர் இதனை தொடர்ந்து “மெல்ல திறந்தது கதவு” என்ற சீரியலிலும் நடித்திருந்தார்.
நடிகை என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை அசல்டாக செய்து முடித்து விடுவார். இவரின் வில்லத்தனமாக நடிப்பிற்கு பின்னால் ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
இந்த நிலையில் நடிகை அனு பல தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்படும் சீரியல்களில் நடித்திருப்பதால் மக்களுக்கு மிகவும் பழக்கமான நடிகையாக வலம் வந்தார்.
இன்ஸ்டாவில் வெளியிட்ட பிரசவ வீடியோ
மேலும் நடிகை அனு கடந்த 2017 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் முடிந்து சுமார் 5 வருடங்கள் ஆன நிலையில் இந்த வருடம் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவிருத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.
இதன்போது இவர் மருத்துவமனையில் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோக்காட்சியை பார்க்கும் குழந்தை பெறுவது என்பது எவ்வளவு கஷ்டமானது என்பது தெளிவாகிறது. இதனை பார்த்த அனு ரசிகர்கள் மூவருக்கும் ஆசியையும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.