உயிருக்கு போராடும் அனு: கைது செய்யப்பட்ட ரோஜா! பிரபல சீரியலில் திடீர் திருப்பம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் வெளியான ப்ரொமோ தற்போது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல ரிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததுடன், மற்ற ரிவியில் ஒளிபரப்பாகிய சீரியலையும் பின்னுக்கு தள்ளியுள்ளது.
இந்த சீரியலில், சிபு சூர்யன், பிரியங்கா மற்றும் வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சீரியல் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
அர்ஜூன் மற்றும் ரோஜாவின் திருமண வரவேற்பு விழா நடைபெறுவதாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு முக்கிய திருப்பம் நடந்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், அனு ரிமோட்டை அழுத்த மண்டபத்தில் தீ விபத்து ஏற்படுகிறது. ரோஜா தீயில் மாட்டிகொள்கிறாள்.
பின்னர் தப்பித்து மாடிக்கு சென்று அனுவின் கையில் இருக்கும் ரிமோட்டை பறிக்க முயன்ற போது, சண்டையில் அனு மாடியிலிருந்து கீழே விழுந்து விடுகிறாள்.
உயிருக்கு போராடும் அனுவை உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தயார் ஆனதும், இதற்கெல்லாம் காரணம், ரோஜா தான் என்று நினைக்கும் டைகர் மாணிக்கம், காவல் துறையில் புகார் அளித்து ரோஜாவை கைது செய்ய வைத்துள்ளார்.
குறித்த ப்ரொமோ வெளியானதிலிருந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் பயங்கரமாக அதிகரித்து வருகின்றது.