கணவருடன் வெளிநாட்டுக்கு பறந்த ஆல்யா மானசா
ஆல்யா மானசா வெளிநாட்டுக்கு செல்லும் பொழுது எடுத்து கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஆல்யா மானசா
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா.
இவர் முதன்முதலில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ராஜா ராணி” சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
இதற்கிடையில், அவருடன் இணைந்து நடித்த கார்த்திக் சஞ்சீவை காதலித்து திருமணம் கடந்த 2019-ம் ஆண்டு செய்து கொண்டார்கள். திருமணத்துக்கு பின்னர் குழந்தைகள் பிறந்ததால் சில ஆண்டுகள் சீரியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்த ஆல்யா மானசா, கடந்த 2022-ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இனியா சீரியலில் நாயகியாக நடித்து வந்தார்.
அதே தொலைக்காட்சியில் கார்த்திக் சஞ்சீவ் கயல் சீரியலில் நாயகராக நடித்து வருகிறார்.
வெளிநாட்டுக்கு பறந்த தம்பதி
சின்னத்திரை நாயகிகளில் அதிக சம்பளம் வாங்கும் ஆல்யா ஒரு நாளைக்கு சீரியல் நடிப்பதற்கு மாத்திரம் ரூ.50 ஆயிரம் சம்பளமாக வாங்கி வந்ததாக கூறப்பட்டது.
சின்னத்திரை மூலம் வளர்ந்து வரும் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி, அண்மையில் சென்னையில் பல கோடி செலவில் பெரிய வீட்டை கட்டி அதில் குடியேறினர்.
சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சொந்தமாக YouTube சேனல் வைத்து நடத்தி வருகிறார்கள். அதில் குழந்தைகளுக்கு தனியாகவும் குடும்பத்திற்கு தனியாகவும் காணொளிகள் பதிவேற்றப்படுகின்றன.
அந்த வகையில், ஆல்யா- சஞ்சீவ் இருவரும் துபாயிற்கு மறுபடியும் சுற்றுலா சென்றுள்ளனர். விமான நிலையத்தில் தம்பதிகளாக எடுத்து கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், “அப்போ குழந்தைகள் வரவில்லையா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |

