Autonomous காரில் பயணம் செய்த நடிகை மீனா! அனுபவம் குறித்து பகிர்ந்த வீடியோ
நடிகை மீனா தொழில் நுட்பத்தின் மீது நம்பிக்கை கொண்டு காட்சிகளை ரசிக்கின்றேன்... என குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை மீனா
முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்டவர்களுடன் ஹீரோயினாக நடித்து மிகப்பெரிய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

80களில் குழந்தை நட்சத்திரமாகவும் அதன் பின் 90களில் ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கொடிகட்டி பறந்தவர்.
இவர் ரஜினி உடன் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் மிகவும் பிரபலமான படம் என்பது அனைவரும் அறிந்ததே. அதன் பின்னர் ரஜினிக்கு ஜோடியாகவே எஜமான், முத்து போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இந்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் மீனாவின் அழகுக்கு இன்றும் ரசிகர்கள் இருக்கின்றார்கள். தற்போது சினிமா துறையில் இருந்து விலகியிருக்கும் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக விஜய் நடிப்பில் வெளியான தெறி மற்றும் அரவிந்சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கள் ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கெண்டார்.

இந்நிலையில், வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று டிரைவர் இல்லாமல் கார் இயங்கும் தொழில்நுட்பமான Autonomous காரில் பயணம் செய்து நடிகை மீனா தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது. கணொளியை காண இங்கே கிளிக் செய்யவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |