இந்த பொடி சாப்பிடுங்க.. தாறுமாறாக தலைமுடி வளரும்- சீரியல் நடிகை கொடுத்த டிப்ஸ்
சீரியல் நடிகை அக்ஷ்யா தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்றால் என்னென்ன விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என பேட்டியில் கூறியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வழக்கமாக சீரியல் நடிகைகள் மற்றும் சினிமா நடிகைகளை பார்த்து தான் பெண்கள் தங்களை அப்படி வடிவமைக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.
சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் வீட்டிலுள்ள பெண்களுக்கு அதிகமாக இணைக்கப்படுகிறார்கள்.
உதாரணமாக அவர்கள் சீரியலில் போடும் புடவைகள், அணிகலன்கள், ஹேர் ஸ்டைல்கள் பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
அதிலும் குறிப்பாக இன்னும் சிலர் கொஞ்சம் அதிகமாக சென்று சீரியல் நடிகைகளின் கதாபாத்திரங்கள் போன்று தன்னை நினைத்துக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
தாறுமாறாக வளரும்..
இந்த நிலையில், ஆஹா கல்யாணம் சீரியலில் நாயகியாக நடித்து வரும் அக்ஷ்யாவிற்கு அந்த சீரியலில் நீளமாக தலைமுடி இருக்கும். அவருக்கு சீரியலில் மாத்திரமல்ல நிஜ வாழ்க்கையிலும் நீளமாக தான் தலைமுடி இருக்கிறது.
இது குறித்து பேட்டியொன்றில் கேட்ட போது அவர் தன்னுடைய அம்மா கூறிய ஹேர் டிப்ஸ்களை அவருடைய ரசிகர்களுக்காக கூறியுள்ளார்.
1. தலைக்கு நன்றாக எண்ணெய் வைக்க வேண்டும். அதுவும் கடைகளில் வாங்கும் எண்ணெய்களை விட வீட்டில் செய்யக் கூடிய சுத்தமான எண்ணெய் வைக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் வைப்பதால் தலைமுடி வளர்வது இல்லை. உங்கள் தலையில் உள்ள ரத்தயோட்டம் அதிகரிக்கும்.
2. வெந்தயம் பேக் தலைக்கு சிலர் போடுவார்கள். இதுவும் தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தாது. மாறாக தலைமுடிக்கு பளபளப்பு கொடுக்கும். வெந்தயத்தை வெளியில் பயன்படுத்துவதிலும் பார்க்க, தினமும் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
3. கறிவேப்பிலை நன்றாக சாப்பிட வேண்டும். இதில் தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் கூறுகள் உள்ளன. நான் கடந்த 15 வருடங்களாக கறிவேப்பிலை பொடி ஒரு தேக்கரண்டி வாயில் போட்டு தண்ணீர் குடிப்பேன். இதனை என்னுடைய பழக்கங்களில் ஒன்றாக செய்து வருகிறேன்.
4. எப்போதும் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உணவு அல்லது திரவங்கள் மூலம் கொடுத்தால் மாத்திரமே தலைமுடி வளர்ச்சி இரட்டிப்பாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |