அதிரடியாக குறைந்த தங்க விலை ... இன்று ஒரு சவரன் எவ்வளவு?
today Gold and silver price : செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் மாற்றங்கள் நகை பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
நேற்று காலையில் கணிசமாக உயர்ந்த தங்கம் விலை, மாலையில் எதிர்பாராத விதமாக அதிரடியாக குறைந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை சரிந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் நகை பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

நேற்று காலை தங்கம் விலை உயர்வை சந்தித்திருந்தாலும், மாலை நேரத்தில் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டது.
நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,175க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,680 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்
இந்நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி, இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,800 குறைந்து, ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், நேற்று மாலை நிலவரத்துடன் ஒப்பிடும்போது, இன்று ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை மேலும் ரூ.225 குறைந்துள்ளது.
ஒரு சவரனுக்கு ரூ.1,800 வரை விலை குறைந்திருப்பது நகை வாங்குவோருக்கு முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.

18 காரட் தங்கம் விலை 22 காரட் தங்கத்தைப் போலவே 18 காரட் தங்கம் விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 18 காரட் தங்கம் விலை ரூ.1,800 குறைந்து, ரூ.93,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டாலும், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |