செப்டம்பர் மாத தொழில் ராசிபலன்: யாருக்கு முன்னேற்றம், யாருக்கு சவால்?
பொதுவாக, ஒரு புதிய மாதத்தில் நாம் நுழையும் போது, அந்த மாதத்தில் ஏற்படும் கிரகங்களின் நிலைமாற்றங்கள், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் முக்கியமான சில கிரக நிலைகள் உருவாகின்றன. மாதத்தின் முதல் பாதியில் சுக்கிரன், புதன், சூரியன் போன்ற முக்கிய கிரகங்கள் தங்களுக்குச் சாதகமான அல்லது சொந்த ராசிகளில் இருப்பதுடன், குரு பகவானும் தனது உச்ச ராசியில் சஞ்சரிக்கிறார்.

இதனால் பல ராசிக்காரர்களுக்கும் தொழில் மற்றும் பணியிட வாழ்க்கையில் சாதகமான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளது. அதன்பிறகு, செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் பாதியில் கிரகங்களின் நிலைகளில் மேலும் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.
செவ்வாய் கிரகம் குரு பகவானுடன் இணைந்து பயணிக்க, புதன் கிரகம் சுக்கிரனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். இந்த கிரக சேர்க்கைகள் ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
இவ்வாறு செப்டம்பர் மாதத்தில் ஏற்படும் முக்கியமான கிரக நிலை மாற்றங்களில் தொழில் நிலையில், எந்த ராசிக்கு எப்படியான பலன்கள் கிடைக்கப்போகின்றது என 12 ராசிகளுக்குமான பலன்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தின் முதல் பாதி தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும்.
மாதத்தின் நடுப்பகுதியில் அன்றாடப் பணிகள் மற்றும் பொறுப்புகள் மீதான கவனம் அதிகரிக்கும். பணியிட விமர்சனங்களுக்கு பதிலளிக்கும்போது உணர்ச்சிவசப்படாமல், பொறுமையாக யோசித்து செயல்படுவது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டால் தொழில் வாழ்க்கை பயனுள்ளதாக அமையும்.
பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விமர்சனங்களை மனதில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் தொழில் சார்ந்த விஷயங்கள் சுறுசுறுப்பாக இருக்கும். புதிய வருமானத்துக்கான வழிகள் திறக்கும்.
மாத தொடக்கத்தில் தொழிலதிபர்கள் புதிய திட்டங்களை செயல்படுத்தவும், வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளவும் ஆர்வமாக இருப்பார்கள். இருப்பினும், அவசரப்பட்டு தொழில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் பொறுமையும் தெளிவான தகவல்தொடர்பும் தொழில் விஷயங்களில் நன்மை தரும்.
பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பணிவாக பேசுவது நல்லது. சூரியனின் நிலையால் தன்னம்பிக்கையும், செவ்வாயின் நிலையால் லட்சியமும் அதிகரிக்கும்.வேலை மாற்றம் குறித்து கவனமாக முடிவெடுக்க வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக நம்பிக்கையுடன் தொடங்கும். மாத தொடக்கத்தில் சூரியன் சொந்த ராசியில் இருப்பதால், புதிய யோசனைகளை செயல்படுத்துவீர்கள்.
புதிய திட்டங்களை பொறுப்பேற்கவும் உகந்த காலமாக இருக்கும். இம்மாதத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதை விட அமைதியாகப் பணியாற்ற விரும்புவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் தொழில் வாழ்க்கை வலுவாக இருக்கும். மாத தொடக்கத்தில் நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க மும்முரமாக செயல்படுவீர்கள்.
வேலை தேடுபவர்களுக்கும், வேலை மாற்ற நினைப்பவர்களுக்கும் இம்மாதம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் தொழில் சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் கருத்துகளைப் பகிரும் வாய்ப்புகள் கிடைக்கலாம்.
தொழிலை அணுகும் விதம் மேம்படுவதால் பயனுள்ள தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது எளிதாகும். வேலை தேடுபவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். அமைதியாகப் பணியாற்றி அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்புவீர்கள்.
பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, அவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். இதனால் வேலைகளை சரியான நேரத்தில் முடியும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்ளுக்கு செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக வலுவாக இருக்கும். தொழில் விஷயங்களை ஒழுங்காகக் கையாள்வீர்கள்.
வெறும் பாராட்டைப் பெறுவதை விட, தொடர்ச்சியான உழைப்பின் மூலம் உங்களை நிரூபிப்பது சிறந்தது. கடின உழைப்பை உயர் அதிகாரிகள் கவனித்து புதிய பொறுப்புகளை வழங்கலாம். மோசமான சூழ்நிலைகளில் அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் தொழிலில் படிப்படியான முன்னேற்றம் காண்பீர்கள். இதனால் நிதி நிலையிலும் உயர்வு ஏற்படலாம்.
வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் புதிய சூழ்நிலைகளைக் கற்றுக்கொண்டு, அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் ஆர்வம் தொழிலில் கைகொடுக்கும்.
வேலையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆர்வம் அதிகரிக்கும். அதேசமயம் பணிச்சுமையும் அதிகரிக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் தனியாக முன்னேறுவதை விட, மற்றவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்வீர்கள்.
வேலையில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். கூட்டுத்தொழில் செய்பவர்கள், கூட்டாளியுடனான நல்ல உறவால் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பு அமையும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |