இன்று தங்கம் விலை அதிரடி சரிவு : சவரனுக்கு ரூ.440 குறைவு!
இன்றைய (செப்டம்பர் 17) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த முழுமையான தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
செப்டம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நேற்று செப்டம்பர் 16ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.14,065க்கும், ஒரு சவரன் ரூ.1,12,520க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
தொடர்ந்து இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.14,010க்கும் சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.11,780க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.94,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |