விநாயகர் சதுர்த்தியில் தங்கம் விலை தடாலடி சரிவு.. இன்று ஒரு சவரன் எவ்வளவு?
செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்றைய செப்டம்பர் 14ஆம் தேதி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
கடந்த சில நாட்களில் விலை உயர்வு மற்றும் சரிவு என மாற்றம் காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170 ஆகவும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.11,940 ஆகவும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.95,520 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்று தங்கம் விலையில் அதிரடியான சரிவு பதிவாகியுள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125 ஆகவும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,13,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, கடந்த செப்டம்பர் 12ஆம் தேதியுடன் ஒப்பிடும்போது, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.360 குறைந்துள்ளது. தங்கம் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு இந்த விலை மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி தொடர்ந்து ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |