Today Gold Price : தங்கம் விலையில் அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.1,920 குறைவு!
இன்றைய (செப்டம்பர் 11) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
செப்டம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ரூ.1,14,040 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று சரிவு பதிவாகியுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.11,785 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.94,280 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,920 அளவுக்கு விலை குறைந்திருப்பது நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.245 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |