செப்டம்பர் முதல் நாளிலேயே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய விலை நிலவரம் இதோ!
ஆகஸ்ட் மாதம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், மாத இறுதியில் அடுத்தடுத்து சரிவை பதிவு செய்தது.
இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் விலை மாற்றத்தை உன்னிப்பாக கவனித்து வந்தனர்.

அந்த வகையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,370க்கும், சவரனுக்கு ரூ.1,080 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,960க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில், புதிய மாதத்தின் தொடக்க நாளிலேயே தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14,385க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,15,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று உயர்வு பதிவாகியுள்ளது. 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,155க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.97,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மறுபுறம், தங்கத்திற்கு மாறாக வெள்ளி விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |