Gold Price Today : தங்கம் விலை கிடுகிடு உயர்வு - இன்றைய விலை நிலவரம்
தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய (செப்டெம்பர் 10) விலை நிலவரம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், அண்மைக்காலமாக அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் கவலையையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்காக தங்கம் வாங்கத் திட்டமிடுபவர்கள், விலை உயர்வால் கூடுதல் செலவை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.14,255 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,14,040 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று உயர்வு பதிவாகியுள்ளது. 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.12,025 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.96,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மறுபுறம், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |