அடையாளமே தெரியாமல் ஒல்லியாக செந்தில் மற்றும் ராஜலட்சுமி! வைரலாகும் திருமண புகைப்படம்
சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதிகளின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
செந்தில் மற்றும் ராஜலட்சுமி
சின்ன மச்சான் பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியர்.
இவர்கள் இருவருமே தொழில்முறை நாட்டுப்புற பாடக கலைஞர்கள். தம்பதியினர் இருவரும் சேர்ந்து நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளனர்.
சூப்பர் சிங்கர் சீசன் 6 ரியாலிட்டி ஷோவில், செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவருமே போட்டியாளர்களாக பங்கேற்று, இதில் செந்தில் வெற்றியாளராக உருவெடுத்தார்.
அவருக்கு ரூ.50 லட்சம் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் ராஜலட்சுமிக்கு ‘மக்களின் குரல்’ என்ற சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சினிமா பாடகராக மாறிய தருணம்
இவர்கள் பாடிய சின்ன மச்சான் பாடல் நடிகர் பிரபுதேவாவுக்கும், இந்த பாடல் பிடித்துவிட, தனது சார்லி சாப்ளின் படத்தில் இருவரையும் இந்த பாடலை பாடவைத்தார்.
அதிலிருந்து செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இருவரும் வெள்ளித்திரையில் சினிமா பாடகர்களாக அறிமுகமாகினர்.
தற்போது புஷ்பா படத்தில் வெளியான ’சாமி சாமி’ பாடல் ராஜலட்சுமிக்கு நல்ல புகழைத் தேடித்தந்துள்ளது.
இந்நிலையில் செந்தில் மற்றும் ராஜலட்சுமியின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.