திடீரென்று பலியான அர்ஜூன் பட இயக்குனர்! உயிரை பறித்தது எது? எச்சரிக்கை... அலட்சியம் வேண்டாம்!
நடிகர் அர்ஜூனின் செங்கோட்டை படத்தினை இயக்கிய இக்குனர் சி. வி. சசிகுமார் திடீர் மராடைப்பால் உயிரிழந்துள்ளார்.
ராமச்சந்திரா மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் சசிகுமார் பரிதாபகரமாக காலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மாரடைப்பு என்பது வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் பாதிக்கும் நோயாக மாறி வருகிறது.

சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டது கூட தெரியாமல் இருந்து விடுகின்றனர்.
பிறகு அதுவே அவர்களின் உயிரை பறிக்கும் எமனாக மாறிவிடுகின்றது.
எனவே மாரடைப்பு வருவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகளை நாம் அறிந்து கொள்வோம்.

- மாரடைப்பு ஏற்படும்போது இதய தசையின் ஒரு பகுதி திடீரென தடுக்கப்பட்டு, செயல்பட வேண்டிய ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை இதயம் தடுக்கிறது.
- நீங்கள் சிகச்சை செய்யாவிட்டால் தடுக்கப்பட்ட இதய தசை நிரந்தர சேதத்திற்குள்ளாக வாய்ப்பு உள்ளது.
- சுவாசத்தை பெறுவதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறீர்கள் என்றால் அது அடைபட்ட அல்லது தடுக்கப்பட்ட தமனிகளின் அறிகுறியாக இருக்கலாம்.
- இது சில நாட்களில் மாரடைப்புக்கு வழி வகுக்கும். உங்க தமனிகள் அடைப்பட்டு இருக்கும் போது இதயத்திற்கு இரத்தத்தை செலுத்துவது கடினம். இதனால் இதயம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
- இதனால் சின்ன வேளை செய்தால் கூட உங்களுக்கு அதிகப்படியாக வியர்க்க ஆரம்பிக்கும். கைகள், தோள்கள் மற்றும் உங்கள் தாடைகளில் பெரும்பாலும் தொடரக்கூடிய மார்பு வலியை நீங்கள் உணரலாம்.
- நீங்கள் பதட்டமாக அல்லது உற்சாகமாக இருக்கும்போது சில நொடிகளுக்கு மேல் உங்கள் இதயம் வேகமாக துடிப்பதைப் போல நீங்கள் உணர்ந்தால் அது அடிக்கடி நடந்தால் உங்க மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

மாரடைப்பு வராமல் இருக்க வாழ்க்கைமுறையில் கொண்டுவர வேண்டிய சில எளிய மாற்றங்கள்
இதயம் சரியாக செயல்பட ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துக்கள், புரதங்கள் மற்றும் மிக முக்கியமாக நல்ல கொழுப்பைக் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது.
நீங்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 2-3 காய்கறிகளையும் பழங்களையும், முழு தானியங்கள் நட்ஸ் மற்றும் விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் நிறைய தண்ணீர் குடியுங்கள். அதே மாதிரி உணவில் உப்பு சேர்ப்பதை கட்டுப்படுத்துங்கள்.
அதிகப்படியான சோடியம் உங்களுக்கு உடம்பில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். பொட்டாசியம் நிறைந்த உணவுகள் உங்க உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
ஒரு நாளைக்கு ஒரு கப் காபி குடிப்பது உங்களுக்கு சிறந்தது. குப்பை உணவுகள் மற்றும் செயற்கை பானங்களை தவிருங்கள். உணவில் ஆலிவ் எண்ணெய்யை சேருங்கள்.

இது உங்களுக்கு ஆரோக்கியமான தேர்வாக இருக்கும். உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். மாரடைப்பு போன்ற இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க உடல் செயல்பாடுகள் அவசியம்.
பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ 30-45 நிமிடங்கள் உடல் பயிற்சிகளில் ஈடுபடுங்கள். வயது, உயரம் மற்றும் எடை இவற்றை சரியான அளவில் பராமரிக்கவும்.
சரியான உடல் நிறை குறியீட்டெண்ணை பராமரிப்பது அவசியம். இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது இரத்த குழாய்களில் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை ஏற்படுத்தும். இது திசுக்களை சேதப்படுத்தும்.
இதனால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முடிந்த வரை உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வையுங்கள்.
நம் இதயம் ஆரோக்கியமாக இருக்க சரியான நேரத்தில் தூங்குவது மிகவும் அவசியம். ஒரு ஆரோக்கியமான தூக்க சுழற்சியை பின்பற்றுங்கள்.
ஒவ்வொரு இரவும் 7-8 மணிநேர தங்கு தடையின்றி, அமைதியான தூக்கத்தை பெற வேண்டும். இது உங்க மெட்டா பாலிசத்தை ஒழுங்குபடுத்தும். ஆபத்து வரும் முன்பு காத்து கொள்வதே சிறந்தது. எனவே மக்களே எச்சரிக்கை.