senaikilangui varuval: கல்யாண சமையில் சுவையில் சேனைக்கிழங்கு வறுவல்...இப்படி செய்து பாருங்க
விதவிதமாக சமைத்து சாப்பிடுவது என்றால் யாருக்கு தான் பிடிக்காது. இது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்றால் மிகையாகாது.
பொதுவாக வைச உணவுகளை விரும்புபவர்களுடன் ஒப்பிடுகையில் அசைவ உணவு உண்வை விரும்புவோர் எண்ணிக்கை சற்று அதிகமாகத்தான் இருக்கும்.
சுவையின் காரணமாகத்தான் பெரும்பாலானவர்கள் ஆரோக்கியம் குறித்து கவலையின்றி அதிகளவில் அசைவத்தை சாப்பிடுகின்றனர்.
அந்தவகையில் அசைவ உணவின் சுயையை மிஞ்சும் வகையில் திருமண வீட்டு சமையல் சுவையில் அருமையான சேனைக்கிழங்கு வறுவல் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சேனைக்கிழங்கு - 1/4 கிலோ
உப்பு - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு தேவையானவை
சோம்பு - 1தே.கரண்டி
மிளகு - 1/2 தே.கரண்டி
தேங்காய் - 2 சில்லு
பூண்டு - 6 பல்
இஞ்சி - 1 இன்ச்
வெங்காயம் - 1
வரமிளகாய் - 4
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சோம்பு - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1கொத்து
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் சேனைக்கிழங்கின் சுத்தம் செய்து தோலை நீக்கிவிட்டு, சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் வரையில் வேக வைத்து நீரை வடிகட்டி தனியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, மிளகு, தேங்காய், பூண்டு, இஞ்சி, நறுக்கிய வெங்காயம், வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்த சேனைக்கிழங்கை போட்டு பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே எண்ணெயில் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த மசாலாவையும் போட்டு பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் பொரித்து வைத்துள்ள சேனைக்கிழங்கை அதில் போட்டு நன்றாக கிளறிவிட்டு மொறுமொறு பதத்துக்கு வரும் வரையில் வதக்கி இறக்கினால், அட்டகாசமான சுவையில் சேனைக்கிழங்கு வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |