pattani masala: மாரடைப்பை தடுக்கும் பட்டாணி மசாலா... வெறும் பத்தே நிமிடத்தில் செய்யலாம்
பொதுவாக எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய பச்சை பட்டாணியில் அதிகளவு கார்போஹைட்ரேட் காணப்படுகின்றது.
இது கலோரிகள் குறைந்த ஒன்று என்றாலும் இதில் நார்ச்சத்து, புரோட்டீன், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
பச்சை பட்டாணியில் மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
இதன் செறிந்து காணப்படும் நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு மிகச்சிறந்த தெரிவாக இருக்கின்றது.
பச்சை பட்டாணி உடலில் சீரண சக்திக்கு மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதன் நார்ச்சத்தால் மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கின்றது.
இதய நோய்க்கு காரணமான கெட்ட கொழுப்பினை பச்சை பட்டாணியில் உள்ள விட்டமின் பி3(நியாசின்) தடைசெய்கிறது.
இக்காயில் காணப்படும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் இதய இரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்கின்றது. அதனால் மாரடைப்பு அபாயம் பெரிதும் குறைகின்றது.
இத்தனை மருத்துவ குணம் கொண்ட பச்சை பட்டாணியை கொண்டு அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அருமையான பட்டாணி மசாலாவை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
உப்பு - 3/4 தே.கரண்டி
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
தக்காளி - 4 (அரைத்தது)
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா - 1 தே.கரண்டி
பச்சை பட்டாணி - 200 கிராம்
சுடுநீர் - 1/2 கப்
முந்திரி - 8 (வெதுவெதுப்பான பாலில் ஊற வைத்தது)
வெண்ணெய் - 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பொன்நிறமாகும் வரையில் வதக்ககிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதங்கவிட வேண்டும்.
அதனையடுத்து அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் அதில் பச்சை பட்டாணியை போட்டு, 1/2 கப் சுடுநீரை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு 5 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.
அது தேயாராவதற்குள் வெதுவெதுப்பான பாலில் ஊற வைத்த முந்திரியை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பச்சை பட்டாணி வெந்ததன் பின்னர் அரைத்து வைத்துள்ள முந்திரி பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, 5 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும்.
கடைசியாக அதில் வெண்ணெய் சேர்த்து கிளறி இறக்கினால், அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த பட்டாணி மசாலா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |