தனுஷின் கன்னத்தில் அறைந்த இயக்குனர்! கதறியழுத சோகம்: அம்பலமாகிய உண்மை
நடிகர் தனுஷை படப்பிடிப்பின் போது இயக்குனர் கன்னத்தில் அடித்துள்ள சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ்
தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் தனுஷ். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனான இவர் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
இன்று நடிப்பு அசுரனாக உயர்ந்து இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவரது அண்ணன் செல்வராகவன் தான்.
தனுஷை சிறந்த நடிகராக்கிய பெருமை செல்வராகவனுக்கு உண்டு. இதனை தனுஷே பல்வேறு மேடைகளில் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் தனுஷ் மற்றும் அவரது அண்ணன் செல்வராகவன் இடையே படப்பிடிப்பில் ஏற்பட்ட மோதல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனரிடம் வாங்கிய அடி
ஆம் கடந்த 2003ம் ஆண்டில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் தனுஷை செல்வராகவன் கன்னத்தில் ஓங்கி அடித்துள்ளாராம்.
குறித்த படத்தில் நடிகை சோனியா அகர்வால் வீட்டுக்கு அவர் முதன்முறையாக செல்லும்போது, அந்த பிரம்மாண்ட வீட்டை பார்த்து பிரம்மித்துப் போகும்படியான காட்சி இடம்பெற்றுள்ள இந்த காட்சிக்கே தனுஷ் அடிவாங்கியுள்ளார்.
ஏனெனில் இந்த காட்சியினை பலமுறை செல்வராகவன் சொல்லிக்கொடுத்தும் தனுஷ் சரியாக நடிக்கவில்லையாம். இதில் அதிகளவில் டேக் எடுத்ததால் கோபமடைந்த செல்வராகவன் தனுஷை அடித்துள்ளார்.
படக்குழுவினர் முன்னிலையில் அடிவாங்கிய அவமானத்தில் தனுஷ் கதறி அழுதிருக்கிறார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள்.
அதன்பின்னரே அந்த காட்சியில் சரியாக நடித்தாராம் தனுஷ். குறித்த சம்பவம் இன்றளவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.