அம்பானி குடும்ப வெற்றிக்கு இதுதான் காரணமாம்.. வெளிச்சத்திற்கு வந்த சீக்ரெட்
அம்பானி குடும்பத்தினர் என்றால் தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. ரிலையன்ஸ் நிறுவனரும் ஆசியாவின் பெரும்பணக்காரருமாக அம்பானி இருக்கிறார்.
பல வெற்றிகளை பார்த்த தொழிலதிபராக வலம் வரும் முகேஷ் அம்பானியும் அவரின் மனைவி நீதா அம்பானியும் பலருக்கு உத்வேகமாக இருந்து வருகிறார்கள்.
அம்பானிகளின் தொலைநோக்கு தலைமை, தொழில் முனைவோர் முயற்சிகள் மற்றும் பரோபகாரப் பணிகள் ஆகியவை நீடித்து நிலைத்திருக்கின்றன. ஆகாஷ், இஷா மற்றும் ஆனந்த் ஆகியோர் முகேஷ் மற்றும் நீதா அம்பானியால் அடக்கமான முறையில் வளர்க்கப்பட்ட வாரிவுகளாவர்.
செல்வச் செழிப்பான குடும்பப் பின்னணியாகவும் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு உரிமையாளராகவும் இருக்கும் முகேஷ் பிள்ளைகளுக்கு தேவையான அனைத்தையும் சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கிறார்.
முகேஷ் அம்பானியின் வெற்றிக்கான அணுகுமுறை வலுவான பணி நெறிமுறை, சவால்களை எதிர்கொள்ளும் உந்துதல் மற்றும் நீண்ட கால இலக்குகளில் அசைக்க முடியாத கவனம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள பலரும் ஆவலுடன் இருப்பார்கள்.
அப்படியாயின் அசைக்க முடியாத அம்பானி குடும்பத்தினரின் வெற்றிக்கு என்ன காரணம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
அம்பானி குடும்பத்தினரின் வெற்றிக்கான காரணம்
1. அம்பானி குடும்பத்தினர் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் முதல் கவனம் செலுத்துவதாக கூறப்படுகின்றது. உடல் நலனை பராமரிக்க வழக்கமான உடற்பயிற்சிகள், யோகா பயிற்சி, நடைபயிற்சி மற்றும் நீச்சல் போன்ற உடல் செயல்பாடுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றார்களாம். எவ்வளவு பிஸியான வாழ்க்கை முறை இருந்தாலும் இதனை தவறுவதில்லை எனக் கூறுகின்றனர்.
2. தூக்கம் என்பது நம் அனைவருக்கும் முக்கியமானதொன்று. மோசமான தூக்கம் நம் உடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அடிப்படையாக தூக்கம் தான் இருக்கிறது. இதனை அறிந்து கொண்ட அம்பானி குடும்பத்தினர் உடல் ஆரோக்கியம், மனக் கூர்மை மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மை ஆகியவற்றை பெற தரமான தூக்கத்தின் அவசியத்தை தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதனால் இவர்கள் எப்போதும் நிம்மதியான தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார்களாம்.
3. சிலர் தங்களது தரமான வாழ்க்கையில் குடும்ப நேரத்தை குறைத்து கொண்டே போகிறார்கள். ஆனால் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அம்பானி குடும்பத்தினர் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை மறக்கமாட்டார்களாம். உணர்ச்சிபூர்வமான தருணங்களை உருவாக்கவும், மன நலனை மேம்படுத்தவும் இதனை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
4. பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. கடுமையான மன அழுத்தம் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். இதனால் அம்பானி குடும்பத்தினர் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்களாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |