பாம்பை போல் விஷத்தை கக்கும் போட்டியாளர்! டாஸ்க்கின் மூலம் உண்மைகளை போட்டுடைக்கும் நந்தனி
பிக் பாஸ் வீட்டில் தற்போது கொடுக்கபட்ட புதிய டாஸ்கில் பாம்பை போல் விஷத்தை கக்குபவராக தனலெட்சுமி தெரிவுசெய்யபட்டுள்ளார்.
பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 6 கடந்த 9ஆம் திகதி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில் கலந்துக் கொண்ட போட்டியாளர்களில் ஜனனி, தனலெட்சுமி , மகேஷ்வரி மற்றும் ஜிபி முத்து என்போர் முக்கிய இடத்தைப் பெற்று விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
தொடர்ந்து சில தினங்களாகவே பிக் பாஸ் வீட்டில் தேவையற்ற வார்த்தை பிரயோகங்களினால் பாரிய சண்டைகள் ஏற்பட்டு ஒரு அமைதியற்ற நிலைமை காணப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் ஜிபி முத்து அவர்கள் கடுமையான மனழுத்தத்தினாலும் அவரின் மகன் மருத்துவமனையில் இருப்பதாலும் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
புதிய டாஸ்க்
மேலும் இன்றைய தினம் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் கொடுக்கபட்டது. இதன்போது பாம்பை போல் விஷத்தை கக்குபவர்களாக அசீம் மற்றும் தனலெட்சுமி தெரிவுச் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி தற்போது இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளி வந்துள்ளது.