வயிறு வலிக்கு ஸ்கேன் எடுக்க சென்ற பெண்! ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ந்த மருத்துவர்
கேரளாவில் வயிறுவலி என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயிறுவலியால் துடித்த பெண்
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை அடுத்துள்ள தாமரச்சேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ஹர்சீனா(30). இவருக்கு கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், 2017ம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
குழந்தை பிறந்த பின்பு வயிறுவலியால் துடித்த ஹர்சீனா அவ்வப்போது வீட்டு வைத்தியத்தை எடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வயிறு அதிகரிக்கவே மருத்துவரை அணுகி மாத்திரை எடுத்து வந்துள்ளார்.
அ்பபோதும் வலி அதிகரிக்கவே வேறொரு மருத்துவரை அணுகியபோது அவர் ஸ்கேன் எடுக்குமாறு கூறியுள்ளார்.

ஸ்கேனில் காத்திருந்த அதிர்ச்சி
பிறகு ஸ்கேன் செய்து எடுத்து பார்த்தபோது, அவரது வயிற்றுக்குள் சுமார் 12 சென்டி மீட்டர் நீளம் கொண்ட கத்தரிக்கோல் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பிறகு ஹர்சீனாவுக்கு உடனடியாக மீண்டும் அறுவை சிகிச்சை செய்து வயிற்றுக்குள் இருந்த கத்தரிக்கோலை வெளியே எடுத்தனர் மருத்துவர்கள்.
பிறகு இச்சம்பவம் குறித்து ஹர்சீனா அளித்த புகாரின் பேரில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவு அளித்துள்ளார்.
ஹர்சீனாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.