உண்மையில் கொள்ளிவாய் பிசாசு இருக்கா? சரியா தெரிஞ்சிக்கோங்க
கொள்ளி வாய்ப் பிசாசு பற்றி பெரும்பாலும் சிறுவயதிலேயே அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். குறிப்பாக கிராம புரங்களில் பிறந்தவர்கள் இந்த ககையை கேட்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் கூற வேண்டும்.
இந்த கதையை கேட்டு இரவு முழுவதும் தூங்காமல் இருந்த காலமும் கட்டாயம் இருந்திருக்கும். கொள்ளி வாய்ப் பிசாசு உண்மையிலேயே இருக்கின்றதா? இதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அறிவியல் விளக்கம்
கொள்ளி வாய்ப் பிசாசு என்பது நாட்டுப்புற மக்களிடையே நம்பப்பட்டு வந்த அமானுஷ்யம். தீயில் எறிந்து இறந்தவர்களே கொள்ளிவாய் பிசாசுகளாகத் திரிவர் என முற்காலத்தில் பலராலும் நம்பப்பட்டு வந்தது.
சில நாட்டுப்புறக் கதைகளில் கொள்ளிவாய் பிசாசுகள் புளிய மரத்தில் உட்காருந்து கொள்ளும் எனவும், நள்ளிரவு நேரங்களில் வெளியில் செல்வோரை அது தொந்தரவு செய்யும் எனவும் கட்டுக்கதைகள் காணப்பட்டது.
அறிவியல் ஆய்வாளர்களின் கருத்துபடி காட்டுத்தீ பற்றி எரியும் போது அவையே மனிதன் போல் உருவம் கொண்டு தெரிவதே நாளடைவில் கொள்ளி வாய்ப் பிசாசு என்ற கருத்து தோன்றுவதற்கு காரணம் என்கின்றனர்.
பொதுவாகவே குப்பைகள் மற்றும் உக்கல் அடைந்த இலைக்குலைகள் இருக்கும் இடத்தில் மீத்தேன் எனும் வெப்ப வாயுவின் உருவாக்கம் அதிகமாக இருக்கும். இது எரிபற்றக் கூடிய வாயு.
மண்ணிற்கு கீழேயிருந்து மீத்தேன் வாயுவின் வெளியேற்றம் காரணமாக சதுப்பு நிலங்களில், கிராமங்களில் உள்ள வயல்களில் சில நேரங்களில் திடீர் தீப்பிளம்பு உருவாகும்.
அது வெப்பக் காற்றின் மீது பட்டவுடன் எரியத் தொடங்கும். அதனால் அதை தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு யாரோ தீப்பிடித்துக் கொண்டு நடந்து போவது போல் காட்சியளிக்கும்.
அதனையே அக் காலத்தில் மக்கள் கொள்ளிவாய் பிசாசுகள் என தவறாகப் புரிந்து வைத்திருக்கின்றனர் என தற்கால ஆய்வாளர்களின் அறிவியல் ஆய்வு குறிப்பிடுகின்றது.
சில விடங்களை முழுமையாக தேடி தெரிந்துக்கொள்ளாமையே மூட நம்பிக்கைகள் இன்றும் உலாவ காரணமாக அமைகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |