நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன்? அறிவியல் காரணம் இது தான்...
திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது தொன்றுதொட்டு வழக்கமாகவுள்ளது. இது திருமணமான பெண்களை தனித்துவமாக காட்டுவதற்கு ஒரு உத்தியாக பயன்படுத்தப்படுவதாகவே நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
நமது முன்னோர்கள் எதையுமே காரணம் இல்லாமல் சொல்லிவைக்கவில்லை. திருமணமான பெண்கள் குங்குமம் அணிவதன் பின்னால் என்ன காரணம் இருக்கின்றது? இதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குங்குமம் வைப்பதன் அறிவியல்
மருத்துவ ஆராய்ச்சிகளின் அடிப்படையில் புருவங்கள் இரண்டும் இணையும் இடமான பொட்டு வைக்கப்படும் இடத்தில் மனித உடல் மின்காந்த சக்திகளை வெளிப்படுத்துகின்றது.
அதன் காரணமாக பெண்கள் இந்த இடத்தை மறைத்து குங்குமம் வைப்பதால் இந்த சக்தி விரயமாவது தடுக்கப்படுகின்றது. மேலும் இந்த பகுதியில் குங்குமம் அணிவதன் மூலம் பெண்களின் உடல் சூட்டின் காரணமாக வரக்கூடிய அனைத்து நோய்களும் கட்டுப்படுத்துகின்றது.
குறிப்பாக புருவங்களுக்கு இடையில் காணப்படும் இடைவெளியில் காந்த சக்தி வெளிப்படுவதனால் ஆண்களை ஈர்க்கும் ஆற்றல் அதிகரிக்கின்றது. அதனை கட்டுப்படுத்தவும் இவ்விடத்தில் குங்குமம் அணியும் வழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் குங்குமம் வைப்பதனால் ஆழ்ந்த சிந்தனையினால் ஏற்படும் தலைவலி, தலை சுற்றல் மற்றும் மயக்கம் போன்றவை ஏற்படாமல் புருவத்தில் உள்ள நரம்புகளை தூண்டுவதற்கு குங்குமம் அணிவது சிறந்த பலனை கொடுக்கின்றது.
சுண்ணாம்பு ,படிகாரம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றில் இருந்து குங்குமம் தயாரிக்கப்படுவதனால் கும்குமத்தை அணிவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இது அதிகரிக்கச் செய்கின்றது.
இதுவே குங்குமம் அணிவதன் அறிவியல் காரணமாகும் இதனை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அணியலாம் இருவரின் உடல் நலத்துக்கும் இது நன்மை பயக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |