Bigg Boss: காலாக நினைத்து தொட்டு கும்பிடுறேன்... மேடையில் கண்கலங்க வைத்த கானா வினோத்
பிக்பாஸ் வீட்டிலிருந்து பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்தை விஜய் சேதுபதி பெருமைப்படுத்தி வழியனுப்பி வைத்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்றைய தினம் கானா வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.
கானா வினோத் டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது இந்த முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை.

18 லட்சத்துடன் வெளியேறுவதாக கூறிய நிலையில், பிக்பாஸ் மிகவும் பெருமையுடன் அவரை வெளியே அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு கொடுக்க வேண்டிய ஷீல்டு, மற்றும் காணொளி இவற்றினை இன்று விஜய் சேதுபதி போட்டு வினோத்தை கலங்க வைத்துள்ளார்.
மேலும் வினோத் தனக்கு இந்த பணம் மிகப்பெரிய உதவி என்றும், அவரது மனைவி பேச்சுக்காக சொல்லவில்லை... எங்களுக்கு இதுபோதும் சார் என்று கூறியுள்ளார்.
கானா வினோத் அங்கு அனைவரது காலாக நினைத்து தொட்டு கும்பிடுவதாக மேடையின் கீழே தொட்டு கும்பிட்டார். விஜய் சேதுபதி நீங்க அவ்வளவு அற்புதமான மூவ்மெண்டை கிரியேட் செய்துள்ளீர்கள் என்று பாராட்டியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |