நடுரோட்டில் பள்ளி உடையில் திருமணம் செய்து கொள்ளும் காதலர்கள்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
முகத்திற்கு சாயம் பூசுவது போல் பள்ளி மாணவியின் நெற்றியில் குங்குமம் பூசிய இளைஞனின் வீடியோக் காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
போலியான வீடியோக்கள்
தற்போது பள்ளி மாணவர்களின் சேட்டை வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
மேலும் இன்னும் சில தினங்களில் காதலர்கள் தினம் வரவிருப்பதால் இது தொடர்பான கவிதைகள், பாடல்கள் மற்றும் காதலர்களின் சான்றுகள் என பல விடயங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்வார்கள்.
இதனை பார்த்து கமெண்ட் செய்து, ஷேர் செய்வதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதனால் இது போன்ற வீடியோக்கள் மக்கள் மத்தியில் உலாவ ஆரம்பிக்கிறது.
இதனால் பள்ளி மாணவர்கள் போன்று அடைகள் அணிந்து பலர் லைக்ஸ்க்காக இது போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள்.
பள்ளி உடையில் நடந்த திருமணம்
இந்த நிலையில் பள்ளி மாணவியொருவர் நடுரோட்டில் புத்தக பையுடன் நிற்கும் போது, முகத்திற்கு சாயம் பூசி ரொமான்ஸ் செய்வதை போன்று குறித்த மாணவியின் நெற்றியில் குங்குமம் பூசியுள்ளார்.
இந்த நிகழ்வை பார்க்கும் தமிழர்களின் திருமண சடங்குகளில் நெற்றியில் குங்குமம் பூசுவது ஒரு சடங்காக செய்து வரும் நிலையில், சிறுவர்கள் இப்படி விளையாடுவது கலாச்சாரத்திற்கு எதிரானது என சொல்லப்படுகிறது.
இந்த காட்சியை funtaap என்பவர் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த காட்சியை பார்த்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்தும், இது பள்ளி மாணவர்கள செய்யும் செயல் அல்ல என நெகட்டிவ்வான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.