செஸ்வான் சிக்கன் லாலிபாப் கிரேவி... ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம்
அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தமான செஸ்வான் சிக்கன் லாலிபாப் கிரேவி ஹோட்டல் ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அசைவ பிரியர்களுக்கு அதிகம் பிடித்த உணவுகளில் ஒன்று தான் சிக்கன். சிக்கனை விதவிதமாக சமைத்து சாப்பிடுகின்றோம்.
சிக்கன் வறுவல், கிரேவி, குழம்பு, கிரில், தந்தூரி என செய்து சாப்பிடும் நிலையில், தற்போது செஸ்வான் சிக்கன் லாலிபாப் கிரேவி ஹோட்டல் ஸ்டைலில் செய்து சாப்பிட பலரும் விரும்புகின்றனர்.
தற்போது செஸ்வான் சிக்கன் லாலிபாப் கிரேவியை ஹோட்டல் ஸ்டைலில் செய்வது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
முட்டை -1
பச்சை மிளகாய் சாஸ் - தேவையான அளவு
வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி
செஸ்வான் சாஸ் - தேவையான அளவு
சிவப்பு மிளகாய் சாஸ் - தேவையான அளவு
லைட் சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - தேவையான அளவு
சோள மாவு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - தேவையான அளவு
சி்ககன் - அரை கிலோ (லாலிபாப்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை
பாத்திரம் ஒன்றில் சிக்கன், இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய் சாஸ், சிவப்பு மிளகாய் சாஸ், சோயா சாஸ் மற்றும் மிளகாய் தூள், உப்பு சேர்த்து சில மணி நேரம் ஊற வைக்கவும்.
சிக்கன் ஊறிய பின்பு முட்டை, சோளமாவு, மைதா, அரிசி மாவு இவற்றினை சேர்த்து நன்றாக கலந்துவிடவும். பின்பு எண்ணெய்யில் சிக்கனை பொரித்து எடுக்கவும்.

கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து, அதில் பூண்டு, பச்சை மிளகாய், ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் சாஸ் மற்றும் செஸ்வான் சாஸ் சேர்த்து வதக்கவும். பின்பு சோளமாவு கரைத்து அதில் ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
பின்பு பொரித்த சிக்கனை கிரேவியில் சேர்த்து நன்றாக கிளறி விட்டால் செஸ்வான் சிக்கன் லாலிபாப் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |