கிராமத்து ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு! எங்கும் சொல்லப்படாத ரெசிபி இதோ
கோழியில் பிராய்லர் மற்றும் நாட்டுக்கோழி என இரண்டு வகை உள்ளன. நகரங்களில் பிராய்லர் அதிகம் கிடைத்தாலும், நாட்டுக்கோழியில் அதிக புரதம், குறைந்த கொழுப்பு மற்றும் தனித்துவமான இயற்கை சுவை உள்ளது.

அதனால் பலரும் நாட்டுக்கோழியை விரும்பி சாப்பிடுகிறார்கள். அதைக் கொண்டு செய்யப்படும் குழம்பு மிக ருசியானது.
அந்த வகையில் நாட்டுக்கோழி குழம்பு கிராமத்து ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவைப்படும் பொருட்கள்
- நாட்டுக்கோழி - 1 கிலோ
- துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
- தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 3
- தக்காளி - 2
- பூண்டு - 3 பல்
- பச்சை மிளகாய் - 4
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - ½ டீஸ்பூன்
- கரம் மசாலா - ½ டீஸ்பூன்
- கொத்தமல்லி விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் - ½ டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- உப்பு - தேவையாள அளவு
செய்முறை
முதலில் மண் சட்டியில் கொத்தமல்லி விதை, சீரகம், பூண்டு, துருவிய தேங்காய் ஆகியவற்றை நன்றாக வறுத்து அரைத்து பேஸ்ட் தயார் செய்யவும்.
பிறகு சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

பின்னர் தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். அதனுடன் அரைத்த மசாலா பேஸ்ட், கரம் மசாலா, தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சில நிமிடம் வேக வைக்கவும்.
இறுதியாக நாட்டுக்கோழி துண்டுகளை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 20–25 நிமிடம் சமைத்து இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.